சீனாவின் நீளமான கண்ணாடி பாலத்தில் விரிசலா?

Report Print Santhan in ஏனைய நாடுகள்

பார்வையாளர்களின் நெரிசல் பலமடங்கு அதிகமானதால் நீளமான கண்ணாடிப்பாலம் மூடப்பட்டது என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் உள்ள ஹூனான் மாகாணத்தில் கடந்த 20 ஆம் திகதி பொதுமக்களால் பெரிதும் உற்று நோக்கப்பட்ட நீளமான கண்ணாடிப்பாலம் திறக்கப்பட்டது. ஆனால் அது நேற்று திடீரென மூடப்பட்டது.

இந்த நிலையில் அந்த கண்ணாடி பாலம் திடீரென்று மூடப்பட்டதன் காரணத்தை விளக்கிய நிர்வாக அதிகாரி ஒருவர், பாலம் மூடப்பட்டதற்கு பாலத்தில் உடைப்போ, விரிசலோ காரணம் கிடையாது. கட்டுக்கடங்காத பார்வையாளர்களின் வருகை காரணமாகத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு 8000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் என்று எண்ணினோம். ஆனால் அதை விட அதிகமானோர் வருவதால் கூட்டத்தை கட்டுபடுத்த முடியவில்லை. இதன் காரணமாகத்தான் பாலம் மூடப்பட்டுள்ளதாகவும், மற்றபடி எந்த ஒரு பாதிப்பும் பாலத்திற்கு ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 20 ஆம் திகதி தான் பாலம் திறக்கப்பட்டது. இது திறக்கப்பட்டு 13 நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், தற்போது பாலம் மூடப்பட்டுள்ளது பொதுமக்கள் பலருக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments