300 மரைகளை ஒரே நேரத்தில் பலியெடுத்த மின்னல்!

Report Print Kumutha Kumutha in ஏனைய நாடுகள்

ஒரே ஒரு மின்னல் தாக்கத்தினால் 300 மரைகள் பலியாகிய சம்பவம் ஒன்று நோர்வே நாட்டில் இடம்பெற்றுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை நோர்வேயின் Hardangervidda மலைப் பிரதேசத்தில் இந்த மின்னல் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது உடல்கருகிய நிலையில் 300 மரைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

1000க்கும் அதிகமான மரைகள் இந்தப் பிரதேசத்தில் காணப்பட்டதாகவும், இவ்வாறான ஒரு சம்பவம் இதுவரை நோர்வேயில் இடம்பெற்றிருக்கவில்லை என்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கடந்த 2005ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற மின்னல் தாக்கத்தினால் 68 கால்நடைகள் ஒரே சந்தர்ப்பத்தில் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments