நடுவானில் குவா குவா: வாழ்நாள் முழுவதும் இலவச பயணம்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்
1539Shares

விமானத்தில் பயணித்தபோது பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளதால்,அக்குழந்தை தனது வாழ்நாள் முழுவதும் பசிபிக் ஏர்லைன்ஸ் விமானத்தில் இலவசமாக பயணிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளது

துபாயில் இருந்து பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரம் நோக்கி கடந்த 14-ம் திகதி சிபு பசிபிக் ஏர்லைன்ஸ் விமானம் சென்றது.

விமானம் இந்திய வான்பகுதியை நெருங்கியபோது, விமானத்தில் பயணம் செய்த பிலிப்பைன்ஸ் நாட்டின் நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

உடனடியாக விமானத்திலேயே இரண்டு செவிலியர்கள் மற்றும் மற்றும் சக பயணிகள் உதவியுடன் அப்பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டு அழகான பெண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறப்பதற்கு இன்னும் 2 மாதங்கள் இருந்த நிலையிலேயே அப்பெண் விமானத்தில் பயணித்துள்ளார்இ. இருப்பினும் குறைபிரசவத்தில் குழந்தை பிறந்ததால், அப்பெண்ணுக்கு சிகிச்சை அளிப்பதற்காக விமானம் அவசரமாக ஐதராபாத் ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

மேலும், விமானத்தில் குழந்தை பிறந்துள்ளதால், அப்பெண் குழந்தை, வாழ்நாள் முழுவதும் இலவசமாக பசிபிக் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிக்கலாம் என்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய சம்பவங்கள் அனைத்தையும் சக பயணியான மிஸ்ஸி பெர்பரே என்ற பெண் தனது பேஸ்புக் பக்கத்தில் விவரித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments