ஜாலியாக நடனமாடிய புதுமண தம்பதி! நொடிப்பொழுதில் நடந்த விபரீத சம்பவம்

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்
592Shares

துருக்கியில் திருமண கொண்டாட்டத்தில் சந்தோஷமாக நடனமாடிக் கொண்டிருந்த போது, திடீரென கார் வெடிகுண்டு வெடித்ததால் அனைவரும் பதற்றமடைந்தனர்.

துருக்கியின் வான் மாகாணத்தின் இபேக்யோலு என்ற மாவட்டத்தில் உள்ள காவல்நிலைய தலைமையகம் மற்றும் குடியிருப்பை நோக்கி இன்று கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் மூன்று பேர் பலியானதாகவும், 40 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு இதுவரையிலும் எந்தவித அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், குர்திஷ் தீவிரவாதிகள் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடந்த போது, அதன் அருகே திருமண கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் அச்சமடைந்து ஓடிஒளிந்து கொள்வது போன்ற பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments