பாலைவனத்தில் உலாவரும் மர்ம உயிரினம்! வைரலாகும் வீடியோ

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்
1362Shares

போர்ச்சுகல் பாலைவனத்தில் மனிதன் போன்ற மர்ம உயிரினம் நடமாடுவது போன்ற வீடியோ வைரலாகியுள்ளது.

வேற்றுகிரகவாசிகள் என்று ஒருவர் இருக்கிறார்களா? இல்லையா? என்பதே இதுவரையிலும் கேள்விக்குறியாக இருந்து வருகிறது.

அவ்வப்போது வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வந்து செல்வதாகவும், வானத்தில் பறப்பதை பார்த்ததாகவும் செய்திகள் வலம்வந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில் போர்ச்சுகல் பாலைவனத்தில் 8 அடி உயரமுடைய மனிதன் போன்ற மர்ம உயிரினம் நடமாடுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.

போர்ச்சுகலின் Madeira தீவில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானபோதும், எப்போது, எங்கு பதிவு செய்யப்பட்டது என்பது போன்ற விபரங்கள் உறுதியாக தெரியவரவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments