இந்த நகரத்துக்கு எல்லாம் செல்ல வேண்டாம்! ஏன் தெரியுமா?

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்
781Shares

உலகில் மிக சிறந்த மக்கள் வாழ்வதற்கான நகரங்கள், மக்கள் வாழ்வதற்கு தகுதியில்லாத நகரங்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.

Economist Intelligence Unit என்ற அமைப்பு உலகில் எந்த நகரத்தில் மக்கள் நிம்மதியுடன் சந்தோஷமாக வாழலாம் என்பது தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியது.

நகரத்தின் சுற்றுச்சூழல், கல்வி, கலாச்சாரம், உள்கட்டமைப்பு, ஸ்திரத்தன்மை உட்பட 30க்கும் மேற்பட்ட காரணிகள் கருத்தில் கொள்ளப்பட்டன.

இதுமட்டுமின்றி உள்நாட்டு போர், தீவிரவாதம், குற்றங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டன. இந்த பட்டியலில் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் முதலிடம் பிடித்துள்ளது.

மக்கள் வாழ்வதற்கான சிறந்த நகரங்களின் பட்டியல்:

 • மெல்போர்ன்
 • வியன்னா
 • வான்கூவர்
 • டொரண்டோ
 • கல்கேரி
 • அடிலெய்டு
 • பெர்த்
 • ஆக்லாந்து
 • ஹெல்ஷின்கி
 • ஹெம்பர்க்

மக்கள் வாழ்வதற்கு தகுதியில்லாத நகரங்களின் பட்டியல்:

 • டமாஸ்கஸ்
 • திரிபோலி
 • லாகோஸ்
 • டக்கா
 • போர்ட் மோர்ஸ்பை
 • அல்ஜீர்ஸ்
 • கராச்சி
 • ஹராரே
 • டுவலா
 • கிவ்

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments