சிறுமியின் கண் இமையில் கூடு கட்டிய பேன்கள்!

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
557Shares

சீனாவில் சிறுமியின் கண் இமையில் 9 பேன்கள், 20 பேன் முட்டைகள் இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் Hubei மாகாணத்தை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு, தொடர்ந்து கண் அரிப்பு, கண் எரிச்சல் மற்றும் கண் சிவப்பாக இருந்துள்ளது.

கண்களில் தூசி அல்லது வேறு எதாவது இருக்கலாம் என கருதி, அவரது தாயார் கண்களை பல முறை கழுவியும் எரிச்சல், அரிப்பு தீர்ந்தபாடில்லை.

இதனால் அவரது தாயார் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

சிறுமியின் கண்ணை மைக்ரோஸ்கோப்பி மூலம் சோதனை செய்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சிறுமியின் கண்ணில் 9 பேன்களும், 20 பேன் முட்டைகளும் இருப்பதாக தெரிவித்து, அதை உடனடியாக மருத்துவர்கள் நீக்கினர்.

இது குறித்து மருத்துவர்கள் கூறியதாவது: சிறுமி சுகாதாரமாக இல்லாத காரணத்தினால் இது போன்று ஏற்பட்டுள்ளது. மேலும் சிறுமிக்கு நெருங்கிய தொடர்புடையவர்களிடமிருந்தும் இது பரவியிருக்கலாம் என கூறியுள்ளனர்.

இதே போல் கடந்தாண்டு சீனாவின் தென் கிழக்கு பகுதியை சேர்ந்த Xiamen என்ற நான்கு வயது குழந்தை கண் இமைகளில் 20 பேன்கள் நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments