பொலிசார் மீது தீவிரவாத தாக்குதல்: 4 பேர் உயிரிழப்பு

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
பொலிசார் மீது தீவிரவாத தாக்குதல்: 4 பேர் உயிரிழப்பு
312Shares

கஜகஸ்தான் நாட்டில் பட்டப்பகலில் காவல் நிலையத்தில் புகுந்து மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கஜகஸ்தானின் வணிகத் தலைநகரான அல்மாடி நகரில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என அந்த நாட்டின் ஜனாதிபதி இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பணியில் இருந்த 3 பொலிசாரும் பொதுமக்களில் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் சிலர் படுகாயமுற்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதியை உடனடியாக கைது செய்த பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பிட்ட நபர் இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களுடன் தொடல்பில் இருப்பவர் என்றும், முன்னர் சில முறை இதுதொடர்பில் சிறைக்கு சென்றவர் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கஜகஸ்தானின் அக்டோப் பகுதியில் நடந்த கொடூர தாக்குதலுக்கு பின்னர் ஒரு மாதம் கடந்து இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அக்டோப் பகுதியில் நடந்த தாக்குதலில் பொதுமக்களில் 7 பேர் கொல்லப்பட்டனர் மேலும் பொலிசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளால் 18 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பியுள்ள கஜகஸ்தான் நாட்டில் சமீப காலமாக அந்த நாட்டு அரசின் புதிய நிலக்கொள்கையை எதிர்த்து பொதுமக்களால் எதிர்ப்பு கூட்டங்களும் இதனால் வன்முறைகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments