திருடனுக்கு கிடைத்த பல்பு! நகைச்சுவையான சம்பவம்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்
திருடனுக்கு கிடைத்த பல்பு! நகைச்சுவையான சம்பவம்
690Shares

நியூசிலாந்து நாட்டில் திருட வந்த திருடன் வெறும் கையோடு திரும்பி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்து நாட்டில் கிறிஸ்ட்சர்ச் என்ற நகரில் சையது அகமத் எகிப்தியன் கபாப் என்ற உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்.

வழக்கமாக தனது உணவகத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது முகமூடி அணிந்த நபர் ஒருவர் சையது அகமத்-ஐ நோக்கி இருக்கும் பணத்தை எல்லாம் எடு, இல்லையென்றால் உன்னை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதற்கு பதில் அளித்த அவர் நான் ஒன்றும் ஹீரோ அல்ல, சாதாரண கடை உரிமையாளர், முதலில் என் வாடிக்கையாளருக்கு இந்த சான்ட்விச்சை கொடுத்துவிட்டு பதில் அளிக்கிறேன் என கூறியுள்ளார்.

அதன் பிறகு அவனுக்கு பதில் அளித்த சையது அகமத் சற்றும் பதற்றம் இல்லாமல் உன்னிடம் பணம் தர முடியாது என்ன செய்ய முடியுமோ செய் என்று பலத்த குரலில் கூறியுள்ளார்.

இதை சற்றும் எதிர்பாராத திருடன் பணம் எதும் கிடைக்காது என்று நம்பி வந்த வேகத்திலே திரும்பி சென்றுவிட்டான். இதனை பார்த்த மக்கள் இது ஒரு நகைச்சுவையான செயல் என்று கூறியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments