விபத்திற்குள்ளான கார்: மின்னல் வேகத்தில் தூக்கிவீசப்பட்ட சிறுமி

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்
விபத்திற்குள்ளான கார்: மின்னல் வேகத்தில் தூக்கிவீசப்பட்ட சிறுமி
424Shares

ரஷ்யாவில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் நடந்த கார் விபத்தில் 4 வயது சிறுமி மின்னல் வேகத்தில் காருக்குள் இருந்து தூக்கிவீசப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

நெடுஞ்சாலையில் வாகனங்கள் அங்கும் இங்கும் சென்றுகொண்டிருக்க blue Ford Fiesta ரக கார், புழுதியை கிளப்பிக்கொண்டு, இரண்டு முறை பல்டி அடிக்கிறது.

இதில் காருக்குள் இருந்த 4 வயது சிறுமி ஒருவர் காரின் ஜன்னல் வழியாக மின்னல் வேகத்தில் தூக்கி வீசப்படுகிறார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதால் இந்த கார் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

மேலும், சிறுமி கார் பெல்ட் அணியாத காரணத்தால் இவ்வாறு தூக்கி வீசப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் சிறுமியின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை, காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது, மேலும் சம்பவ இடத்திற்கு அவசரஊர்தி வரவழைக்கப்பட்டு அருகில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சிறுமி கொண்டு செல்லப்பட்டார்,

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அவர் தற்போது நலமுடன் இருக்கிறார், இந்த விபத்தினை, அதே நெடுஞ்சாலையில் இவர்களுக்கு எதிரில் பயணித் பெண் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments