இவள்...சிங்கங்களின் தோழி!

Report Print Maru Maru in ஏனைய நாடுகள்
இவள்...சிங்கங்களின் தோழி!
1340Shares
1340Shares
lankasrimarket.com

வனவிலங்குகள் பராமரிப்பில் சாதனை என்ற வித்தியாசமான புகழில், உலகை திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறாள் தண்டிவே வீத்வா.

சாதனை படைக்க வயது வரம்புகளில்லை எனவும் இதன் மூலம் நிரூபித்திருக்கிறார் பதின்ம வயது இந்த கறுப்பின இளம்பெண்.

வீத்வா வனவிலங்குகளை பாதுகாக்கும் ஆர்வத்தை சுயமான உணர்வு உந்துதலில் பெற்றுள்ளார். சிறுவயதில் அவளுடைய தாய் கூறிய கதைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பபூன், வெர்வெட் குரங்கு, எருமை, யானை, சிங்கம் போன்ற விலங்குகளை பற்றி அறிந்த செய்திகளே அவளுக்கு இந்த ஆர்வத்தை கொடுத்துள்ளது.

ஆரம்பகால அனுபவம்

தண்டிவே வீத்வாவின் இளம் வயதிலே தாயும் தந்தையும், ஒருவர் பின் ஒருவராக இரண்டு வருடங்களுக்குள் இறந்தனர்.

பிறகு, தாயாருடைய சொந்த கிராமமான ’ம்புவே’வில் தாய்மாமன் வளர்ப்பில் வாழ்ந்தாள். அவளுடைய 12 வயதில் தெற்கு ஸாம்பியாவிலிருந்து வடக்கு நகருக்கு வாழ்க்கை தேடலோடு வந்தாள்.

அங்கு அவள் வசித்தது, தண்ணீர் மற்றும் மின்சார வசதி இல்லாத செங்கற்களாலான சிறிய வீடுதான், அவள் தாய்க்கு பெரிய சுற்றம் இருந்ததை, இந்த கிராமத்திற்கு வந்து தெரிந்துகொண்டார்.

’ம்புவே’ கிராமத்திற்கு வரும்முன் நான் வனவிலங்குகளை பார்த்ததில்லை. நாங்கள் முன்பு வாழ்ந்த வீட்டில் சுற்றி கரும்புத் தோட்டங்களே இருக்கும்.

இங்கு முதன்முதலாக நான் பார்த்த வனவிலங்கு தனியாக வந்தா ஒரு ஆண் பபூன் குரங்குதான். இந்த கிராமத்தில் மா மரங்கள் அதிகம் அதனால், பழுக்கும் பருவத்தில் குரங்குகள் குவியும். மற்ற விலங்குகளும் அதிகம் வாழ்கின்றன.

வீத்வாவுக்கு பெற்றோரை இழந்த வலிக்கு மாற்றாக விலங்குகள் மீதான ஆர்வ உணர்வு புகுந்து வாழ்க்கைக்கு புதிய வழி கொடுத்துள்ளது.

”இந்த வனவிலங்குகளோடு வாழும் வாழ்க்கையும் என் பள்ளி பாதுகாப்பு சங்கமும் ஆதரவாக இருக்கும் உறவினர்களும் என் உற்சாகம்.

இதனால்தான் இங்கு சுற்றுச்சூழல் பிரச்சினைகள் இருந்தபோதிலும் அம்மா விலங்குகளுடனான நெருக்கத்தை நேசித்திருக்கிறார். அவர் ரசித்துதான் கதைகளை கூறியிருக்கிறார் என்பது எனக்கு இங்கு வந்த பின்பே புரிந்தது. இந்த ஆர்வமும் அம்மாவிடமிருந்தே வந்திருக்கும்’ என்கிறார்.

விலங்குகள் அனுபவம்

சிங்கங்களை காப்பாற்ற நிறைய வேலைகள் செய்தால், சிங்கங்களை கூட நம் வீட்டு செல்லப்பிராணிகள் போல பாவிக்க முடியும்.

சிங்கத்தோடு பழகுவதையும் அதற்கு பணி செய்வதையும் ஜாலியாக அனுபவிப்பேன். அதுபோல காட்டு நாய்களும் அன்பான விலங்குதான். அதே சமயம் மிகவும் ஆபத்தானவை.

காட்டு நாய்களின் வாழ்க்கையை கவனித்தால் அதில் பல சுவாரஸ்யங்களும் ஆச்சரியங்களும் உள்ளன. உண்மையாக காட்டு நாய்கள் நிறைய பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. காட்டு நாய்கள் ஒரு சமுதாயமாக வாழ்கிறது.

அவைகள் ஒன்றோடு ஒன்று தொடர்புகொள்கிறது, உதவிக்கொள்கிறது, குட்டிகள், நோய்வாய்பட்ட நாய்கள் மற்ற நாய்களால் பாதுகாக்கப்படுகிறது. குழுவில் உள்ள ஒவ்வொரு நாயின் நடவடிக்கைகளையும் கவனிக்க நாம் வியப்போம், வேறு மகிழ்ச்சியை எதிர்பார்க்க தோன்றாது. என்றவர் சில கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

உங்களுக்கு ஆர்வம் இருந்தாலும் சமாளிப்பதில் பிரச்சினையாக எதை உணர்கிறீர்கள்?

எங்கள் பள்ளியில் பாதுகாப்பு சங்கம் உள்ளது. எங்களுடைய மாதாந்திர பயணம் தேசிய பூங்காவின் எல்லையில் உள்ள காடுகளில்தான் நடக்கிறது. அங்கு போதுமான கருவிகள், வசதிகள் செய்துகொண்டு செல்கிறோம்.

விலங்குகளை கையாளும் முறையில் மற்றவர்களை விட எனது அனுகுமுறை அலாதியாக இருக்கும்.

நீங்கள் லாங்க்வா நதி பள்ளத்தாக்கை பற்றி மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்றீர்கள் அது எந்த அளவுக்கு முக்கியமானது?

லாங்க்வா நதி பள்ளத்தாக்கு பிரபலமடையாத பகுதி, ஆனால், அது ஒரு அற்புதமான இடம். வனவிலங்குகளின் இயல்பான வாழ்க்கை நிலை இன்னும் சிதைவடையாமல் இருக்கிறது. ஸாம்பியாவின் பெரிய சிங்கங்களும் பெரிய சிறுத்தைகளும் காட்டு நாய்களும் அங்குதான் அதிக எண்ணிக்கையில் உள்ளன.

மேலும், அது கவனிக்காமல் விடப்படுவதால் யானைகள் போன்ற வியாபாரா ரீதியில் பயன்படும் விலங்குகள் சமூக விரோதிகளால் அதிகமாக வேட்டையாடப்படுகின்றன. அது காடுகளில் உள்ள உயிரியல் சுழற்சியை பாதிக்கிறது.

அங்கு அரிதான பெரிய பூனைகள் அதிகமாக அழிக்கப்படுகிறதே. பூனைகளையும் மற்ற விலங்குகளையும் பாதுகாக்க முடியும் என நம்புகிறீர்களா?

மக்களிடம் உள்ள இது போன்ற விலங்குகளுக்கு எதிர்மறையான உணர்வுகள் மனச் சோர்வை ஏற்படுத்துகிறது. கருவிகள், சரியான தடுப்பு நடவடிக்கைகளால் நிச்சயம் காப்பாற்ற முடியும் என்றார்.

கொடிய விலங்குகள் ஆனாலும், அவற்றை அதன் குட்டிகளோடு பார்க்கும்போது, நாமும் அதனுடைய அன்பு வளையத்தில் விழுவோம்.

வீத்வாவின் எழுச்சியான செயல்பாடுகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் இளம் தலைமுறை மாணவர்களுக்கும் பரவி ஆர்வம் வளர்த்துள்ளது.

வனத்துறையில் 100 அலுவலர்கள் சம்பளத்திற்காக வேலை செய்துகொண்டிருக்கலாம். ஆர்வமுள்ள ஒரு வீத்வா விலங்குகள் பாதுகாப்பதில் எடுத்துள்ள இதுவரை இல்லாத முன்னெடுப்பு நடவடிக்கைகள் ஸாம்பியாவை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. மற்ற நாடுகளையும் உசுப்பேத்தி உள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments