நாளை மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம் தகவல்

Report Print Kavitha in இயற்கை
368Shares

தெற்கு அந்தமான் பகுதிகளில் நாளை மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இக்காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வுகள் புரெவி புயல் கரையை கடந்த பின்பு தெரியவரும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்நிலையில் தற்போது வங்கக்கடலில் பாம்பனுக்கு 90 கி.மீ. தொலைவில் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் புரெவி புயலானது மையம் கொண்டுள்ள நிலையில் பாம்பன்- குமரி இடையே நாளை அதிகாலைக்குள் மீண்டும் கரையை கடக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இயற்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்