இலங்கையின் திருகோணமலையை நேற்றிரவு கடந்த புரெவி புயல் தற்போது பாம்பனை நெருங்குகிறது.
வங்கக்கடலில் உருவான புரெவி புயல் காரணமாக தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் புரெவி புயல் திருகோணமலையில் கரையை கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த சமயத்தில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து தற்போது பாம்பனை புயலானது நெருங்கி வருகிறது.
அதன்படி பாம்பனில் இருந்து 90 கி.மீ தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது.
பாம்பன்- கன்னியாகுமரி இடையே இன்று இரவு அல்லது நாளை அதிகாலை புரெவி புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது.
புரெவி புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சமாக 90 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.