இன்று இரவு புரேவி கடும் புயலாக மாறி இங்கெல்லாம் கன மழை பெய்யும்...! அதிகாலையில்... வானிலை மையம் அறிவிப்பு

Report Print Santhan in இயற்கை
158Shares

இலங்கை அருகே உருவாகியுள்ள புதிய புயலான புரெவி இன்று இரவு குமரி கடல் பகுதிக்கு நகரும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து வங்கக் கடலில் தற்போது இலங்கை அருகே புயல் உருவாகியுள்ளது.

இந்த புயலுக்கு புரெவி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த புயல் பாம்பன் பகுதியில் இருந்து தென் கிழக்கே 300 கிலோ மீற்றர் தொலைவிலும், கன்னியாகுமரிக்கு கிழக்கு- வடகிழக்கே 400 கிலோ மீற்றர் தொலைவிலும் நிலை கொண்டு இருந்தது.

இதையடுத்து நேற்றிரவு இது மேலும் வலுப்பெற்று பாம்பன் பகுதிக்கு சென்றது. இதன் காரணமாக ராமநாதபுரம், தென்காசி, கன்னியாகுமரி, சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.

இன்று இந்த புயல் பாம்பன் வழியாக மேற்கு, தென்மேற்கு திசையில் நகர்ந்து தென் தமிழக கடலோரப்பகுதியை ஒட்டி நகரும்.

இன்று இரவு மேலும் வலுப்பெற்று கடும் புயலாக மாறி, பின்னர் நாளை அதிகாலையில் பாம்பன்-கன்னியாகுமரி இடையே தென் தமிழக கடற்கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் தாக்கம் இன்று காலை முதல் ராமநாதபுரம் தொடங்கி படிப்படியாக கன்னியாகுமரி வரை அதிகரிக்கும். அப்போது மேற்கண்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

இன்று பிற்பகலுக்கு பிறகு மணிக்கு 99 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும். மாலத்தீவு மற்றும் அரபிக் கடல் பகுதியில் மணிக்கு 65 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இயற்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்