புரெவி புயல் மணிக்கு 18 கி.மீ வேகத்தில் நகருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயலின் காரணமாக புதுச்சேரி காரைக்கால் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. புரெவி புயல், பாம்பனுக்கு 420 கி.மீ தொலைவிலும், குமரிக்கு 600 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது
இலங்கை திருகோணமலைக்கு கிழக்கில் 200 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.
புரெவி புயல் வடமேற்கு திசையில் 18 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது
இன்று மாலை அல்லது இரவுக்குள் திருகோணமலையில் கரையை கடக்கும்
நாளை காலை மன்னார் வளைகுடா பகுதியை நெருங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை இரவு அல்லது மறுநாள் அதிகாலை பாம்பன் - குமரிக்கு இடையே கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது.
புயலானது கரையை கடக்கும் போது தமிழக கடற்பகுதியில் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் மாற்றத்தை அறிய முடியும் என தெரியவந்துள்ளது.
இதனிடையில் புரெவி புயல் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் 6 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.