வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக எங்கெங்கு எல்லாம் கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன் வந்த நிவர் புயல் சென்னை உட்பட சில நகரங்களில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது, வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 13 கி.மீற்றர் வேகத்தில் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் அடுத்த 12 மணி நேரத்தில் இது புயலாக மாறும். நாளை மாலை அல்லது இரவு திரிகோணமலை அருகே கரையை கடக்கும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் எங்கெங்கு மழை பெய்யும், புரேவி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்த புயலின் காற்றின் வேகம் எவ்வளவு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கன்னியாகுமரிக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 900 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.
இது நாளை காலை டிசம்பர் 2-ஆம் திகதி வலுபெற்று மேற்கு வடமேற்கு திசையில் நாளை மாலை அல்லது இரவு நேரத்தில் மன்னார் வளைகுடா வழியாக குமரி கடல் பகுதிக்கு நகர உள்ளது.
இதனால் இந்த 2 நாட்களும் எங்கெங்கு மழை பொழிய போகின்றன என்று எச்சரிக்கையாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, டிசம்பர் 1-ஆம் திகதி(இன்று) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்களான புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
அதேபோன்று நாளை தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கன மழையும்.
புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும்.
மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 3-ஆம் திகதி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கன மழையும்.
அதே போன்று சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
இதைத் தொடர்ந்து தெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு இன்று மாலை வரை 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்திலும் இடையிடையே 70கிலோமீற்றர் வேகத்திலும், தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோமீற்றர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது.
நாளை, மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதி மணிக்கு 45 முதல் 55 கிலோமீற்றர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீற்றர் வேகத்திலும் வீசக்கூடும்.
மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதி கேரள கடலோர பகுதி ஆகிய இடங்களில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீற்றர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீற்றர் வேகத்திலும் வீசக்கூடும்.
டிசம்பர் 3-ஆம் திகதி, மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதி சூறாவளி காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோமீற்றர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோமீற்றர் வேகத்திலும் வீசக்கூடும்.
டிசம்பர் 4-ஆம் திகதி, மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதி சூறாவளி காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோமீற்ற்றர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோமீற்றர் வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.