இயற்கை எழில் கொஞ்சும் குட்டி இங்கிலாந்து "நுவரெலியா”

Report Print Kavitha in இயற்கை
549Shares

இலங்கையில் பல இயற்கை இடங்களில் அதிகம் சுற்றுலா பயணிகளை கவர்ந்த இடமாக நுவரெலியா திகழ்கின்றது.

இது இலங்கையில் “குட்டி இங்கிலாந்து” என செல்லமாக அழைக்கப்படுகின்றது.

பசுமையான புற்தரைகளுடன் பசுமையாக விளங்கும் இந்நகரம் பிரித்தானியர் காலத்திலிருந்தே ஒரு விடுமுறைத் தலமாக விளங்கி வருகிறது.

சிங்கள மொழியில் நுவர என்பது நகரம் என்பதையும், எலிய என்பது வெட்ட வெளி அல்லது ஒளியைக் குறிக்கும். எனவே நுவரெலியா (நுவர-எலிய) என்பது ஒளிபொருந்திய நகரம் என்னும் பொருளை உடையது.

தமிழில் இந்நகரம் நூரலை எனவும் அழைக்கப்படுவதுண்டு.

உயரமான மலைகளுக்கு நடுவே, கடல் மட்டத்திலிருந்து 1900 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ள இந்த நகரமே இலங்கையில் மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ளது.

இங்கு கண்ணை கவரும் பூங்காக்கள், ஆலயங்கள்,நீர்வீழ்ச்சிகள், ஆறுகள் போன்று இயற்கை அழகுடன் ரம்மியமாக காட்சி தருகின்றது.

மேலும் இது பற்றி சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.

மேலும் இயற்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்