நச்சு உலோகங்களை உணவாக உட்கொள்ளும் தாவரங்கள்: வியக்க வைக்கும் காரணம்

Report Print Givitharan Givitharan in இயற்கை

நிக்கல் மற்றும் நாகம் போன்றன தாவர வளர்ச்சிக்கு மிகமுக்கியமான மூலகங்கள்.

ஆனாலும் Hyperaccumulators எனப்படும் தாவரமானது வழக்கத்துக்கு மாறாக நச்சு மூலகங்களை அவற்றின் தண்டு, இலைகள் மற்றும் விதைகளில் அதிகளவில் உள்ளெடுக்கின்றன.

குறிப்பாக Pycnandra Acuminata தாவரத்தில் மேற்கொள்ளப்பட் ஆய்வொன்றில், இவ்வகை தாவரங்கள் பூச்சிகளிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளவென நிக்கலைப் பயன்படுத்துவதாக தெரியவருகின்றது.

இதிலிருந்து வெளிவரும் பாலானது நீலப்பச்சை நிறமானதுடன், 25 வீதம் நிக்கலைக் கொண்டது.

Pycnandra Acuminata தாவரமானது கிட்டத்தட்ட 20 மீற்றர் நீளமானது.

இது மெதுவாக வளரும் தாவரமாகையால் இதன் மீது ஆய்வுகளை மேற்கெள்வது சவாலானது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இத் தாவரம் பூக்கள், விதைகளைத் தோற்றுவிக்க தசாப்த காலங்களாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இயற்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்