பூச்சிகளை விரட்டுவதற்கும் உதவக்கூடிய தாவரப் பரம்பரை அலகு

Report Print Givitharan Givitharan in இயற்கை

விஞ்ஞானிகள் ஒரு சிறியவகை பன்னம் ஒன்றின் பரம்பரையலகை வரிசைப்படுத்தியுள்ளனர். இவ்வகை பன்னம் வளிமண்டல காபனீரொட்சைட்டின் அளவைக் கட்டுப்படுத்துவதிலும், விவசாயத்தில் நைதரசனைப் பதி்ப்பதிலும் உதவக்கூடும் என நம்பப்படுகிறது. மேலும் இது பயிர்களிலிருந்து பூச்சிகளை விரட்டுவதற்கும் உதவக்கூடியது என சொல்லப்டுகிறது.

Azolla filiculoides எனும் இது ஒரு நீர்வாழ் பன்னம். இது ஆசியாவில் பெரும்பாலும் வயல் நிலங்களில் உரத் தேவைக்கென அதிகம் பயன்படுத்தப்பட்டுவரும் ஒரு பன்னம்.

15 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் புவியானது மிக வெப்பமான இடமாகக் காணப்பட்டது. விரைவாக வளரும் இவ் Azolla ஒரு தடவை ஆட்டிக் வட்டத்தை சூழ்ந்திருந்தது.

அதன்படி இது புவியின் வளிமண்டலத்திலிருந்து 10 திரில்லியன் காபனீரொட்சைட்டை அகற்றியிருந்தது. இதுவே தற்போது புவி குளிச்சியாக உள்ளதற்கு காரணம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

மேற்படி பன்னத்தின் பரம்பரையலகை வரிசைப்படுத்திய போது குறித்தவொரு பரம்பரையலகு பூச்சிகளுக்கு எதிர்ப்பைக் காட்டியிருந்தது.

"பொதுவாக பூச்சிகள் பன்னத்தை விரும்புவதில்லை, இது எவ்வாறு என்பது பற்றி விஞ்ஞானிகள் ஆச்சரியப்பட்டதுண்டு” என லீ கூறுகிறார்.

இவர் பன்னத்தின் பரம்பரையலகுகளில் ஒன்று அநேகமாக பக்ரீரியத்திலிருந்து வருவிக்கப்பட்டிருக்கலாம் என விபரிக்கின்றார்.

" இது இயற்கையாக விருத்திசெய்யப்பட்ட பரம்பரையலகு, அதை தற்போது தான் நாம் கண்டுபிடித்திருக்கின்றோம், நாங்கள் விவசாயத்தில் இதன் தாக்கங்களை அதிகம் பயன்டுத்தக்கூடும்" என அவர் மேலும் தெருவிக்கின்றார்.

மேலும் Azolla இலைகளில் காணப்படும் cyanobacteria நைதரசனைப் பதிக்கவல்லது.

மேலும் இயற்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்