தெற்கு லண்டனை மிரட்டும் சகாரா புழுதி, ஆனாலும் பயங்கர புயல்களை அது தடுக்கக் கூடும் எனவும் நம்பிக்கை

Report Print Givitharan Givitharan in இயற்கை

சகாரா பாலைவனத்திலிருந்து வரும் புழுதிகள் தெற்கு லண்டனிலிலுள்ள பெரும்பாலான மக்களைப் பாதித்திருந்தது. இது மங்கலான வானம் மற்றும் கண்கவர் சூரிய அஸ்தமனத்திற்கு காரணமாகியிருந்தது.

மேற்கொண்ட ஆய்வுகளிலிருந்து இது அத்லான்டிக்குக்கு மேலாக மேற்காக நகர்ந்து 5000 மைல்கள் தாண்டி வட அமெரிக்காவை அடைந்ததாக தெரியவருகிறது.

விஞ்ஞானிகளின் கருத்துப்படி இப்புழுதி முகில்களின் உருவாக்கத்தை பாதிப்பதன் மூலம் அப்பகுதி வெப்பநிலையை பாதிக்கக்கூடும்.

இதன் கருத்து இப் புழுதி உள்ள போது சிறு புயல்கள் மற்றும் சூறாவளி உருவாகும் சாத்தியம் குறைவு.

மேலும் இப் புழுதிப் புயல் சூரிய ஒளியை தெறிக்கவிடுவதன் மூலமும், அதனைஅகத்துறிஞ்சுவதன் மூலமும் சூரிய மேற்பரப்பை அடையும் ஒளியின் அளவை குறைவடையச் செய்கிறது.

இப் புழுதி அப்பகுதியில் இருக்கையில் கடல் மற்றும் நில மேற்பரப்புக்களில் குளிரான வெப்பநிலைகளை உணரமுடியும் என சொல்லப்படுகிறது.

மேலும் இயற்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers