சூரிய உதய, அஸ்தமன அற்புதக் காட்சிக்குப் பின்னால் இருக்கும் அந்த உண்மை என்ன?

Report Print Givitharan Givitharan in இயற்கை

சூரியோதய, அஸ்தமன நேரங்களில் வானம் சிகப்பாக தோன்றுகிறதே, ஏன் என்று இதுவரை யோசித்ததுண்டா?

இவ்விரு நேரங்களிலும் சூரியனானது வானின் தாழ்வான பகுதியில் காணப்படுகிறது. இதிலிருந்து புறப்படும் ஒளி நம்மை அடைவதற்கு நீண்ட தூரம் வளிமண்டலத்தினூடு பயணிக்க நேரிடுகிறது.

பொதுவாக ஒளி வளிமண்டலத்தை மோதும் போது அது சிதறலடைகிறது. குறிப்பாக தூசு, புகை, மற்றும் துணிக்கைகள் வளிமண்டலத்தில் அதிகமாக உள்ள போது இவ் விளைவு அதிகம்.

இதில் நீல நிறம் ஒளித்தெறிப்பு காரணமாக அதிகம் பாதிக்கப்படுகிறது. இதனால் சூரிய ஒளி நம் கண்களை அடையும் போது சிகப்பு மற்றும் மஞ்சள் கதிர்களே அதிகளவில் காணப்படுகின்றன.

மேலும் இது முகில்களின் விளைவால் மேலும் அழகான தோற்றத்தை தருகிறது.

அதாவது சூரியன் தாழ்வான பகுதியிலிருக்கும் போது கீழுள்ள முகில்களில் ஒளிக்கதிர்கள் பட்டுத் தெறித்து செம்மஞ்சள், சிகப்பு கதிர்களாக மேலெழுவதால் வானம் ஒளிரும் தீக் குழம்பு போல் காட்சியளிக்கிறது.

மேலும் இயற்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers