அந்தாட்டிக்கா பகுதியில் பாரிய மாற்றங்கள் நிகழக்கூடிய வாய்ப்பு

Report Print Givitharan Givitharan in இயற்கை

பெரிய அல்கா கடல் பாசி இந்தியன், அத்லான்டிக் பகுதியிலிருந்து புறப்பட்டு 20 000 கிலோமீட்டர்கள் மிதந்து அந்தாட்டிக்கா பகுதியை சென்றடைந்துள்ளது.

இந்த பயணமானது முன்னர் இயலாது என்று அறியப்பட்டிருந்த தூரமாகும்.

இது விஞ்ஞானிகள் கருதியிருந்தது போல் அந்தாட்டிக்கா தனிமைப்படுத்தப்பட்ட பகுதியல்ல என்பதற்கும் சான்றாக உள்ளது.

தற்போது விஞ்ஞானிகள் இக் கடல் பாசியின் பயணம் எவ்வாறு சாத்தியம் என கணனி மாதிரிகள் மூலம் ஆய்வு செய்து வருகின்றனர்.

இது வருங்காலத்தில் அந்தாட்டிக்கா கண்டத்தில் நிலைமைகள் எவ்வாறாக மாற்றமடையக்கூடும் என்பது பற்றிய தகவல்களைத் தரக்கூடும்.

இதிலிருந்து வடக்குப் பகுதியிலுள்ள உயிரினங்கள் அந்தாட்டிக்கா பகுதிக்கு செல்லமுடியும் என்பது தெளிவாகிறது.

மேலும் இயற்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers