மிட்டாய் போன்று காட்சியளிக்கும் சிலந்தி முட்டைகள்

Report Print Givitharan Givitharan in இயற்கை

சிலந்தி முட்டைகள் கடந்த ஜீன் 26 ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட மேற்படி புகைப்படத்திலுள்ளதுபோல் பிரமாதமான வண்ணங்களில் வருவதுடன் அவை மிட்டாய் போன்று காட்சியளிக்கின்றன.

என்னதான் பார்க்கும் போது சுவைக்கத் தோணினும், ஆகஸ்டு, 2017 இல் Arachnology எனும் ஆய்வுப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருப்பது போல சில சிலந்தி முட்டைகள் நச்சுத்தன்மையானவை.

காட்டப்பட்டுள்ள படத்தில் ஆஸ்திரேலியன் சிலந்தி இனத்தைச் சேர்ந்த முட்டைக் கலங்களின் இரு குப்பிகள், ஒன்று பச்சை, இது Holconia வப்பைச் சேர்ந்த ஹன்ஸ்மான் சிலந்தி. மற்றைய மஞ்சள் நிறமானது Cyrtophora வகுப்பிற்குரியது.

இவ் ஒளி ஊடுபுகவிடக்கூடிய முட்டைகளானது சுவையான பசைத்தன்மையுடைய மிட்டாய்கள் போன்று காட்சியளிக்கின்றன.

மேற்படி புகைப்படமடங்கிய ரூவீட்டானது விஞ்ஞானி Glenn King அவர்களினால் போடப்பட்டிருந்தது.

மேலும் மேற்படி இரு வகைகளுக்கு மேலதிகமாக செம்மஞ்சள், ஊதா போன்ற வர்ணங்களிலும் சிலந்தி முட்டைகள் காணப்படுவதாக சொல்லப்படுகிறது.

மேலும் இயற்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers