29 வகை புதிய குளவி இனங்கள் கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in இயற்கை

விஞ்ஞானிகள் தற்போது புதிதாக 29 குளவியினங்களை கண்டுபிடித்து விபரித்துள்ளனர். அவற்றின் வாழ்க்கை வட்டம் நிச்சயம் உங்களை பிரமிப்பில் ஆழ்த்தும்.

அவற்றின் வாழ்க்கை வட்டம் பற்றி இங்கு பார்ப்போம். இக்குளவிகள் மற்றைய விலங்குகளில் முட்டையிடுகின்றன. இதனால் முட்டை பொரிக்கும் போது உருவாகும் ஒட்டுண்ணி வாழ்க்கைக்குரிய புளுக்கள் தமக்கான போசணைகளை அவ்விலங்குகளிலிருந்து பெறுகின்றன.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவற்றின் உட் பாகங்கள் இவ் ஒட்டுண்ணிகளால் இரையாக்கப்படினும் அவ்விலங்குகள் உயிருடனேயே இருக்கின்றன.

புளுக்கள் பெரிதாக வளரும் போது விருந்து வழங்கிகள் பொதுவாக பூச்சிகள் மற்றும் சிலந்திகள் தோற்றத்தில் சுருங்கிப்போகின்றன.

அவை வளர்ந்து முற்றாகப் பருவமடைந்த நிலையில் விருந்து வழங்கியின் பாகங்களை முற்றாக இரையாக்கி அவற்றின் கோதுகளை மட்டுமே விட்டுச் செல்கின்றன.

எனவே இவை நிச்சயம் ஒட்டுண்ணியினதும், மெகுவாக கொலைசெய்யும் இரைகௌவியினதும் கலப்பாக இருக்க வேண்டும்.

இவ் 29 வகை குளவியினங்களும் ஆசியா, ஆபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா வெப்ப மண்டல பிரதேங்களுக்குரிய இனங்களாக உள்ளன. இவற்றுக்ளான பெயரிடும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

இதில் ஆஸ்திரேலியாவில் கண்டபிடிக்கப்பட்ட இனமானது Qrocodiledundee outbackense எனப் பெயரிடப்பட்டுள்ளது. மற்றுமொரு இனமானது Qrocodiledundee outbackense எனப் பெயரிடப்பட்டுள்ளது. மற்றைய 27 இனங்களும் அவற்றுக்குரிய வகுப்புக்களால் அடையாளப்படுத்தப்பட்டிருந்தன.

தற்போதைய மதிப்பீடுகளின் படி இன்னும் 85 -95 வீதமான ஒட்டுண்ணி வாழ்க்கைக்குரிய குளவியினங்கள் அடையாளப்படுத்தப்படாமலேயே இருக்கின்றன.

மேலும் இயற்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers