உலகிலேயே அதி ஆபத்தான, இயற்கை சீறும் பஞ்சபூத இடங்கள் !

Report Print Gokulan Gokulan in இயற்கை
165Shares

இயற்கை எந்த அளவுக்கு மிக அழகானதோ, அதே அளவுக்கு மிகவும் ஆபத்தானதாகவும் உள்ளது.

ஏழை, பணக்காரர் வித்தியாசமின்றி அனைவரையும் அழிக்கும் ஒன்று இயற்கை தான். அப்படி மிகவும் ஆபத்தான இயற்கை இடங்களை பற்றி பார்ப்போம்,

தண்ணீர் – (பசிபிக் பெருங்கடல்)

உலகத்திலேயே மிக அதிகமான மற்றும் வேகமான நீரோட்டத்தைக் கொண்ட கடல் நார்வேயில் அமைந்துள்ள 'சால்ட்ஸ்ட்ராமென் ஸ்ட்ரெய்ட்' கடல்தான்.

இங்கு உருவாகும் நீர்சுழற்சி அதீத வேகத்திலும், மிகுந்த ஆழத்திலும் உருவாவதால் இது மிகவும் ஆபத்தான இடமாகக் கருதப்படுகிறது. 2012ம் ஆண்டில் மட்டும் கடலில் 1051 மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக சர்வதேச கடல் அமைப்பு தெரிவித்துள்ளது.

நிறைய ஆராய்ச்சிகளுக்குப் பின் ஓரளவுக்கு கடலின் நீரோட்டத்தை கணித்து, நீரில் மூழ்காத படகில் பயணம் செய்ய மட்டும் இங்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீறினால், கடல் மாதாவுக்கு உயிர் அர்ப்பணம்தான்.

கிட்டத்தட்ட 71%சுனாமிகள் பெரும்பாலும் பசிஃபிக் பெருங்கடலில்தான் ஏற்படுகின்றன என்பதும் குறிப்பிடதக்கது.

வானம் – ( Maracaibo லைட்னிங் கேப்பிட்டல்):

உலகிலேயே அதிக வெளிச்சமான இரவை காணும் இடம் வெனிஸுலாவில் இருக்கும் மாரகைபோ (maracaibo) ஏரிதான். இங்கு கணக்கு வழக்கு இல்லமல் தொடர்ந்து 9 மணி நேரம் வரை கூட மின்னல்கள் மின்னிய வரலாறு இதற்குண்டு.

எனவே இந்த இடம்தான் உலகின் “லைட்னிங் கேப்பிட்டல்” எனும் வேறொறு பெயரும் இதற்கு உண்டு. ”மின்னல் ஒரே இடத்தில் மின்னாது” என ஆங்கிலத்தில் பழமொழி சொல்வார்கள்.அவர்களை இங்கு அழைத்து சென்றால் அது பொய் என நிருபித்து காட்டலாம்.

பூமி – (ஷான்சி, சான் ஆன்டிரியாஸ்)

நிலநடுக்கம், மற்ற இயற்க்கை பேரிடர்களைவிட சற்றே வேறுபட்டது ஏனெனில் மற்ற இயற்க்கை சீற்றத்தை விட நிலநடுக்கம் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியதாகும். நாம் வாழும் இந்த பூமியின் நிலபரப்பு முழுதும் நகரும் தட்டுகளால் ஆனது நாம் நினைப்பது போல் பூமியின் மேற்பறப்பு நிலையானது அல்ல.

இந்த தட்டுகள் ஒன்றுக்கு ஒன்று எதிரான திசையில் நகரும் வகையிலானது அவ்வாறு நகரும் வேலையில் ஒன்றோடு ஒன்று மோதி நில அதிர்வலைகள் ஏற்பட்டு நிலநடுக்கம் ஏற்படும். ஃபிலிப்பைன்ஸ் நகரில் 10ல் 8 நகரங்கள் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

1556ல் சைனாவில் உள்ள ஷான்சி நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 80,0000 மக்கள் உயிரிழந்துள்ளார்கள். வட அமெரிக்காவில் இருக்கும் சான் ஆன்டிரியாஸ் நகரமும் இந்த டேஞ்சரஸ் பட்டியலில் அடங்கும்.

காற்று – (ஆப்பிரிக்கா)

புயல், சூறாவளி இரண்டும் காற்றின் அடிப்படையில் ஏற்படும் இயற்கை பேரிடர்கள். பொதுவாக மிகவும் வேகமாக சுழன்று வரும் புயலோ அல்லது சூறாவளியோ அதிக பாதிப்பை ஏற்படுத்தாது. ஏனெனில் சுழன்று வருகயில் அதன் வேகம் தணிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படும், எனினும் புயல்களின் வீரியத்தை எப்போதும் 100% சரியாகக் கணித்துவிட முடியாது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

நதிகளில் பலவகையை கண்டிருப்போம் கர்பண்-டை-ஆக்சைடு நதியை பற்றி கேள்விபட்டது உண்டா ஆப்பிரிக்காவில் 'லிம்னிக் எரப்ஷன்' எனப்படும் புவிமாற்றத்தால் ஏற்படக்கூடிய நதிகளான இவை நதியின் அடியில் இருந்து புகைமண்டலம் வெளிப்படும் அதில் கார்பன் டை ஆக்ஸைடு வெளிபட்டு நையோஸ் நதி மற்றும் கிவு நதி இந்த லிம்னிக் எரப்ஷனால் பாதிக்கபட்டிருக்கின்றன.

இது மிகவும் ஆபத்தானவை. அதாவது 1 980-களில் ஏற்பட்ட இந்த எரப்ஷனால் 3,500 கால்நடைகள் உள்ளிட்ட பல ஆயிரம் உயிரினங்கள் பறிபோயிருக்கின்றன

இதுவரை . இங்கு வெளிப்படும் கார்பன் டை ஆக்ஸைடை குழாய்கள் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுருந்தாலும், இன்றளவும் அங்கு பாதிப்புகள் அதிகமாகவே காணப்படுகிறன..

நெருப்பு – (எத்தியோப்பியா)

எரிமலை ஆனது எதிர் திசையில் மலையின் அடியில் இருக்கும் தட்டுகள் திரும்புவதால் பூமியின் அடியில் உள்ள அதிஉயர் வெப்பம் காரணமாக மாக்மா வெளிப்படுவதால் உறுவாகிறது.

எத்தியோப்பியாவில் உள்ள தனாகி நகரம்தான் உலகத்திலேயே எரிமலையால் அதிகம் பாதிக்கப்பட்ட, அதிக ஆபத்து நிறைந்த இடம்.

கடந்த 400 வருடங்களில் சுமார் 2,00,000 மக்கள் எரிமலை சீற்றத்தால் உயிரிழந்திருக்கிறார்கள். உலகத்தின் மிக வெப்பமான இடமாக கருதப்படும் இந்த நகரம், எரிமலை சீற்றத்தால் நீர்வளம் குறைந்து உப்பரித்து காணப்படுகிறது.

இப்போது இங்கு யாரும் வசிக்கவில்லை. 1815-ம் ஆண்டு சம்பாவா தீவுகளில் உள்ள தம்போரா எரிமலை சீற்றத்தால் 70,000 மக்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இயற்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்