மகனை பின்னால் கட்டி தர தரவென இழுத்துச் சென்ற தாய்: உண்மையை கூறாமல் கதறி அழுத பரிதாபம்

Report Print Santhan in இயற்கை

சீனாவில் மகன் திருடிய குற்றத்திற்காக, தாய் அவனை இரு சக்கர வாகனத்தின் பின்னால் கயிற்றை வைத்து கையை, கட்டிய இழுத்துச் சென்றுள்ளார்.

சீனாவின் Zhaotong பகுதியில் உள்ள Ludian County என்ற இடத்தில், தாய் ஒருவர் தனது இளைய மகனை அவரது இரு சக்கர வாகனத்தின் பின்னால் கயிற்றை வைத்து கட்டி, அவரை இழுத்துச் சென்றுள்ளார்.

இது தொடர்பான வீடியோவை அங்கிருக்கும் நபர் ஒருவர் தன்னுடைய மொபைல் போனில் எடுத்துள்ளார்.

அப்போது அந்த தாய், தன்னுடைய மகன் வீட்டிலிருந்த £224 பணத்தை திருடிவிட்டதாகவும், அந்த பணத்தை என்ன செய்தாய், எதற்கு திருடினாய் என்று கேட்ட போது அவன் சொல்ல மறுத்த காரணத்தினாலும், இந்த பணம் கிட்டத்தட்ட என்னுடைய கணவரின் ஒரு மாதம் சம்பளத்திற்கு இணையானது என்று கூறியுள்ளார்.

இருசக்கர வாகனத்தின் பின்னால் கயிறு கட்டப்பட்ட நிலையில் இருந்த சிறுவன் கதறி அழுதபடியே இருந்தான், ஆனால் அவரது தாயார் பணம் குறித்து கேட்ட போது, அதற்கு பதில் கூற மறுத்துவிட்டார்.

இதனால் இது போன்று அவனை தொடர்ந்து இரண்டு, மூன்று நாட்கள் செய்யப் போகிறேன் என்று மிரட்டியுள்ளார்.

அதன் பின் இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதால், பொலிசார் இது குறித்து அவரது தாயாரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அவர், அவன் இனிமேல் இது போன்று செய்யக் கூடாது என்பதற்காக மிரட்டினேன் என்று கூறியுள்ளார். ஆனால் பொலிசார் இது போன்று எல்லாம் செய்யக் கூடாது, வார்த்தைகளிலே மிரட்டினால் போதும் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் அந்த சிறுவன எடுத்த பணத்தை என்ன செய்தான் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

மேலும் இயற்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்