மனிதர்கள் அழிந்துவிட்டால் உலகம் எப்படி இருக்கும்?

Report Print Printha in இயற்கை
537Shares

மனிதர்கள், இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் என்று அனைத்து உயிர்களும் வாழும் இடம் தான் பூமி.

இந்த பூமியில் வாழும் மனிதர்கள் திடீரென மறைந்து விட்டால், 25,000 ஆண்டுகள் கழித்து நம் உலகம் எப்படி இருக்கும் தெரியுமா?

ஓராண்டில்

வானுயர்ந்த கட்டிடங்கள் எழுப்ப, எட்டு வழி பாதை சாலைகள் அமைக்க, மேம்பாலங்கள், மெட்ரோ, வீட்டு மர சாமான்கள் என மனித வசதிக்காக உருவாகிய சாலைகள் மற்றும் தெருக்களில் கட்டுக்கடங்காத செடி, கொடிகள் அனைத்தும் கட்டிடங்களை நெரித்து சுற்றி படரும்.

மக்கள் இல்லாததால் வாகனங்கள், தொழிற்சாலைகள், ஏ.ஸி. என எந்த பயன்படும் இல்லாமல் போகும். அதனால், காற்று மாசடைந்த நிலை மாறும்.

குளிர்

மனித இனங்கள் அழிந்து விட்டால், கோடை காலத்திலும் வெயில் குறையும். குளிர் காலத்தில் குளிர் பல மடங்கு அதிகரிக்க துவங்கும்.

உயிரினங்கள்

மனிதர்களால் வேட்டையாடப்பட்ட உயிரினங்கள் சுதந்திரமாக இனபெருக்கம் செய்து, தன் இனத்தின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளும்.

30 ஆண்டுகளில்

மனித இனம் அழிந்தால் காணும் இடமெல்லாம் பச்சைப்பசேல் என்று காட்சியளிக்கும். ஓர் புதிய சுற்றுச்சூழல் உருவாகி தாவரங்கள், இதர உயிரினங்கள் நிம்மதியாக வாழ வழி வகுக்கும். கடலில் மூழ்கிய கப்பல்களில் எல்லாம் பவளப்பாறைகள் உருவாக துவங்கும்.

60 ஆண்டுகளில்

ஆராய்ச்சி மற்றும் அறிவியல் என்ற பெயரில் மருந்து கண்டுப்பிடிப்பதற்காக அழிந்த கடல் முற்றிலுமாக தன்னிலை திரும்பும். மீன்கள் தனது பழைய எண்ணிக்கையை கொண்டு குதுகலமாக துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கும்.

200 ஆண்டுகளில்

கார், தொழிற்சாலை மற்றும் மனிதர்களின் இதர காரணங்களால் உலகில் அதிகமான CO2 அளவு முற்றிலுமாக நீங்கி, உலகம் நன்கு சுவாசித்துக் கொண்டிருக்கும்.

தண்ணீரை அடைத்து கட்டப்பட்ட அணைகள் அனைத்தும் இடிந்து விழுந்து சிறைப்பட்ட ஆறுகள் தனது அன்னைமடி தேடி பாய்ந்து ஓட துவங்கும்.

500 ஆண்டுகளில்

அழிக்கப்பட்ட காடுகள் அனைத்தும் தன்னிலை அடைந்திருக்கும். அதாவது, 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வுலகில் காடுகள் எப்படி இருந்ததோ அதேபோல காட்சியளிக்கும்.

25,000 ஆண்டுகளில்

மனிதனின் அடையாளத்திற்கு என்று அணுக் கழிவுகள் மட்டுமே 10,000 ஆண்டுகள் இருக்கும். அதன் பின் மனிதன் வாழ்ந்த ஏனைய அனைத்தும் அடையாளங்களும் மறைந்து விடும்.

மனிதன் அழிந்த பின் சில நூறு ஆண்டுகளில் உலகம் தன்னிலையை மீண்டும் அடைந்து விடும்.

மேலும் இயற்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்