கூச்ச சுபாவம் மிக்க பாம்பு: அதன் எச்சத்தில் இவ்வளவு வீரியமா?

Report Print Printha in இயற்கை
480Shares

மண்ணுளி பாம்பு நம்மை நக்கினால் அல்லது கடித்தால் நமது கை, கால்களில் குஷ்ட நோய் வரும் என்று கூறுவார்கள்.

ஆனால் அது உண்மை அல்ல, இந்த பாம்பு கடித்து மரணம் நிகழ்ந்ததாக இதுவரை எவ்வித பதிவும் இல்லை.

உண்மையில் மண்ணுளி என்பது பாம்பு இனமே இல்லை. இது மண்புழு குடும்பத்தை சேர்ந்த ஒரு பெரிய அளவிலான புழு மட்டுமே என்று அறிவியல் கூறுகிறது.

மண்ணில் வாழ்வதால் இதற்கு மண்ணுளி என்று கூறப்பட்டது. இந்த மண்ணுளி மிகுந்த கூச்ச சுபாவம் மற்றும் பயந்த சுபாவம் கொண்டதாக இருக்குமாம்.

மண்ணை மட்டும் சாப்பிட்டு மண்ணிலேயே கழிவு செய்யும் மண்ணுளி புழு, ஒரு இயற்கை உரத்தினை உற்பத்தி செய்கிறது.

இந்த மண்ணுளி புழு இடும் எச்சம் மிகவும் வீரியமான இயற்கை உரமாக உள்ளது.

ஒரு நிலத்தில் ஒரு மண்ணுளி புழு இருந்தால் அந்த இடத்தை சுற்றிலும் பல ஏக்கர்களுக்கு போதுமான இயற்கை உரத்தின் சக்தியை ஒரு மண்ணுளி புழுவால் உற்பத்தி செய்ய முடியும்.

இந்த மண்ணுளி புழுக்கள் மணற்பாங்கான இடங்களிலேயே விரும்பி வாழும்.

இவை மண்ணில் சுவாசிப்பதன் மூலம் மண்ணின் காற்று உள்புகும் திறனும் அதிகரித்து ஆக்சிஜனும் நைட்ரஜனும் இயற்கையாகவே மண்ணுக்கு கிடைக்க செய்கிறது.

மண்ணுளி புழு மணலுக்கு இயற்கை உரத்தை அளிப்பதால், இந்த மண்ணுளி புழுக்களை செடி வளர்க்கும் தொட்டியில் அடைத்து வைக்கக் கூடாது. ஏனெனில் அது 2-3 நாட்களில் இறந்துவிடும்.

மேலும் இயற்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்