உலகில் அதிக விஷத்தன்மை கொண்ட ஆபத்தான விலங்குகள் இவை தான்

Report Print Raju Raju in இயற்கை

உலகில் பல்வேறு வகையான விலங்குகளும், ஊர்வனங்களும் உள்ளன. இவைகளில் பல உயிரினங்கள் கொடூரமான விஷத்தன்மை கொண்டவைகளாகும்.

அதிக விஷத்தன்மை கொண்ட உலகின் ஐந்து விலங்குகள் / ஊர்வனங்கள்
நுங்கு மீன் (Box Jelly Fish)

இந்தோ பசிபிக் கடல் பகுதியில் அதிகம் வாழும் இவ்வகை உயிரினம் தான் உலகிலேயே அதிக விஷத்தன்மை கொண்டதாகும். மனிதர்களை இது தாக்கினால் அதன் விஷம் நரம்பு மண்டலம் மற்றும் இதயத்தை பாதித்து உடனடியாக உயிரை பறிக்கும்.

ராஜ நாகம் (King Cobra)

ஆசியாவின் உயரமான காடுகளில் அதிகம் வாழும் இவ்வகை பாம்புகள் அதிகபட்சமாக 18 அடி நீளத்தில் இருக்கும். விஷத்தன்மை அதிகம் கொண்ட ராஜ நாகம் மற்ற பாம்புகளை விட 5 மடங்கு அதிக விஷத்தை உட்செலுத்துகிறது. 20 மனிதர்களை ஒரே நேரத்தில் கொல்லும் அளவிலான விஷத்தை ராஜ நாகம் கக்கும்.

நீல-வளைய ஆக்டோபஸ் (Blue Ringed Octopus)

ஆக்டோபஸ் குடும்பத்தில் நீல-வளைய ஆக்டோபஸ் தான் சிறியது என்றாலும் இது அதிக விஷத்தன்மை கொண்டதாகும். இது தனது எச்சில் மூலம் இருவகையான விஷங்களை உமிழ்கிறது. இந்த ஆக்டோபஸ் கடித்தால் வலிக்காது. ஆனால் கடித்த சிறிது நேரத்தில் வாந்தி, குமட்டல், மூச்சு விடுவதில் சிரமம் போன்றவைகள் ஏற்பட்டு உயிரும் போகலாம்.


கூம்பு நத்தை (Marbled Cone Snail)

இவ்வகை நத்தைகளை இந்திய பெருங்கடலில் அதிகம் காணலாம். இதன் ஒரு சொட்டு விஷம் 20 மனிதர்களை கொல்லும் சக்தி கொண்டதாகும். இரையை பிடிக்கவே தனது விஷத்தை கூம்பு நத்தை அதிகம் பயன்படுத்துகிறது. இவ்வகை நத்தை கடிக்கு மருந்துகளே கிடையாது!


பாறை மீன் (Stone Fish)

இந்தோ பசிபிக் கடல் பகுதியில் அதிகம் காணப்படும் இவ்வகை மீன்கள் மிகவும் ஆபத்தானதாகும். இதன் முள்ளந்தண்டுக்களில் 13 கூர்மையான விஷத்தன்மைகள் உள்ளன. பாறை மீன் கடித்தால் அதிக வலி ஏற்படுவதுடன் தசை பலவீனம் மற்றும் தற்காலிக முடக்கம் ஏற்படும். சரியான மருத்துவ சிகிச்சையை உடனடியாக பெறாவிட்டால் உயிரிழப்பு ஏற்படும்.

மேலும் இயற்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்