சீனாவை தாக்கிய சூறாவளி: 11 பேர் பலி

Report Print S.P. Thas S.P. Thas in இயற்கை

சீனாவில் தாக்கிய சூறாவளியால் இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர் என சீனத் தவல்கள் தெரிவிக்கின்றன.

உலகின் மிகப்பெரிய சூறாவளி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தச் சூறாவளி இன்று மதியம் தாக்கியுள்ளது. இதனால் அந்நாட்டில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.

தைவான் மற்றும் சீனாவின் பியூஜியான் மாகாணத்தில் ஷியாமென் நகரையும் தாக்கியது. புயலுக்கு பியூஜியான் மாகாணத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர்.

இதேவேளை 3 பேர் ஜெஜியாங் மாகாணத்தில் பலியாகியுள்ளனர். தைவானில், ஒருவர் பலியாகியுள்ளார். இந்நிலையில் 11 பேரை காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவொருபுறமிருக்க, நாளை சனிக்கிழமை கடுமையான மழை பெய்யும் என வானிலை அவதான மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை இச் சூறாவளி காரணமாக 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

சூறாவளி, வலிமையான பாலம் ஒன்றையும் சேதப்படுத்தியுள்ளது. அங்கு மீட்பு பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

குறித்த சூறாவளிக்கு உலகின் மிக வலிமையான சூறாவளி என்றும் மெரண்டி சூறாவளி என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் இயற்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments