தனது சேவையை நிறுத்தும் ஊபர்: எங்கு தெரியுமா?

Report Print Givitharan Givitharan in வாகனம்

ஊபர் நிறுவனமானது தனது ஒன்லைன் வாடகை வாகன சேவையை கொலம்பியாவில் நிறுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இவ் அறிவித்தலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஊபர் நிறுவனம் புதிய அப்பிளிக்கேஷன் ஒன்றினை அண்மையில் வெளியிட்டிருந்தது.

இதில் Ride Sharing எனப்படும் பயணங்களை அறிந்துகொள்ளும் வசதி தரப்பட்டிருந்தது.

எனினும் இவ் வசதியானது உள்ளூர் போக்குவரத்து விதிகளை மீறுவதாக கூறி வழக்கு தொடரப்பட்டது.

இது இவ் வசதிக்கு சில சாரதிகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இதனை அடுத்தே கொலம்பியாவில் தனது சேவையை விரைவில் நிறுத்தவுள்ளதாக ஊபர் தெரிவித்துள்ளது.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்