அதிரவைக்கும் பாலியல் தொல்லைகள்: ஊபர் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்

Report Print Givitharan Givitharan in வாகனம்

உலகமெங்கிலும் ஒன்லைன் மூலமான போக்குவரத்து சேவையில் ஊபர் நிறுவனம் முன்னணி வகித்துவருகின்றது.

அதேபோன்று பயணிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சாரதிகள் தொடர்பாகவும் ஊபர் நிறுவனத்திற்கு அவப்பெயரும் ஏற்பட்டுவருகின்றது.

தற்போது இவ்வாறான சாரதிகள் தொடர்பில் கடுமையான எச்சரிக்கையாக செயற்பட்டுவருகின்றது ஊபர்.

இதேவேளை கடந்த 2018 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் தனது சாரதிகளால் பயணிகளுக்கு கொடுக்கப்பட்ட பாலியல் தொல்லைகள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் ஒன்றினை ஊபர் வெளியிட்டுள்ளது.

இதன்படி சுமார் 3,000 வரையான புகார்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே ஆண்டில் அங்கு 1.3 பில்லியன் வரையான போக்குவரத்து சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றிலேயே 3,000 வரையான பாலியல் தொல்லை குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும் இது அதற்கு முந்தைய வருடங்களை விடவும் 16 சதவீதத்தினால் குறைந்து காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்