பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஊபர் அறிமுகம் செய்யும் அதிரடி வசதி

Report Print Givitharan Givitharan in வாகனம்

உலகளவில் பல மில்லியன் கணக்கானவர்களால் பயன்படுத்தப்படும் ஒன்லைன் போக்குவரத்து சேவையாக ஊபர் விளங்குகின்றது.

இச் சேவையைப் பெற்றுக்கொள்ளும் பயனர்கள் சாரதிகளின் நடவடிக்கைகளால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக பல குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டிய கட்டாயத்தில் ஊபர் நிறுவனம் உள்ளது.

இதன் ஒரு கட்டமாக பயணிகளுக்கு சேவை வழங்கும் வாகனங்களில் தானியங்கி குரல் பதிவு செய்யும் முறையை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

இம் முறையினை மெக்ஸிக்கோ மற்றும் பிரேஸிலில் சோதனைக்கு உட்படுத்தியுள்ளது.

இவ்வாறு குரல் பதிவு செய்யப்படுவது தொடர்பான தகவலை சாரதி மற்றும் பயணிகள் பெற்றுக்கொள்ள முடியும்.

எனினும் குறித்த ஒலிப்பதிவு என்கிரிப்ட் செய்யப்படுவதுடன் சாரதியோ அல்லது பயணியோ செவிமடுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்