சீனாவிலுள்ள தொழிற்சாலையிலிருந்து தனது முதலாவது Model 3 காரினை உருவாக்கியது Tesla

Report Print Givitharan Givitharan in வாகனம்

விண்வெளிக்கு செயற்கைக் கோள்களை ஏவுவதில் ஆர்வம் காட்டி வரும் டெஸ்லா நிறுவனம் உலகின் முன்னணி இலத்திரனியல் வாகன வடிவமைப்பு நிறுவனமாகவும் திகழ்கின்றமை தெரிந்ததே.

இந்நிறுவனமாது சீனாவிலும் தனது வாகனத் தொழிற்சாலை ஒன்றினை நிறுவியுள்ளதாக முன்னர் தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் தற்போது அத் தொழிற்சாலையில் இருந்து Model 3 எனும் புதிய இலத்திரனியல் காரினை வடிவமைத்து அறிமுகம் செய்துள்ளது.

சங்ஹாயிலுள்ள குறித்த தொழிற்சாலையில் இருந்து அடுத்து வருடம் முதல் வாரம் தோறும் 3,000 கார்களை உற்பத்தி செய்வதற்கும் டெஸ்லா தீர்மானித்துள்ளது.

இதேவேளை Shanghai Gigafactory எனப்படும் குறித்த தொழிற்சாலைதான் அமெரிக்காவிற்கு வெளியே காணப்படும் டெஸ்லா நிறுவத்தின் முதலாவது வாகன வடிவமைப்பு தொழிற்சாலையாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்