தற்போது ட்ரைவர் இன்றி தானியங்கி முறையில் இயங்கக்கூடிய கார்கள் வடிவமைப்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
சில நிறுவனங்களின் கார்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததுடன், டெஸ்லா நிறுவனத்தின் கார்களில் சில வசதிகள் தானியங்கி முறையில் தரப்பட்டுள்ளன.
இப்படியிருக்கையில் இவ் வகை கார்கள் எதிர்காலத்தில் அதிகளவு போக்குவரத்து நெரிசல்களை ஏற்படுத்தும் என ஆய்வு ஒன்றின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் அடிலைட் பல்கலைக்கழகத்தின் ஆய்விலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆய்வில் ஈடுபட்ட குழுவானது தானியங்கி கார்களின் செயற்பாட்டு முறைகளை துல்லியமாக ஆராய்ந்த பின்னரே இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இக் கார்களை பொதுச் சேவையில் ஈடுபடுத்தும்போதே அதிக போக்குவரத்து நெரிசலை சந்திக்க நேரிடும் எனவும் இது அடுத்த 30 வருடங்களில் மேலும் அதிகரிக்கும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.