ஊபர் வாடிக்கையாளர்கள் தொடர்பாக வெளியான ஆய்வுத் தகவல்

Report Print Givitharan Givitharan in வாகனம்

ஒன்லைன் மூலமான வாடகை வாகன சேவையை வழங்கிவரும் ஊபர் இன்று உலகின் பல நாடுகளிலும் மிகவும் பிரபல்யம் அடைந்து காணப்படுகின்றது.

அதேநேரம் பல மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்கள் நாள்தோறும் இச் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இவ்வாறு குறித்த சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஊபர் சாரதிகளுக்கு ஒருபோதும் டிப்ஸ் வழங்குவதில்லை என ஆய்வறிக்கை ஒன்று கூறுகின்றது.

அதாவது 60 சதவீதமானவர்கள் ஒருபோதும் டிப்ஸ் வழங்குவதில்லை எனவும், 1 சதவீதமானவர்கள் எப்போதும் டிப்ஸ் வழங்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை எஞ்சிய சதவீதத்தினர் எப்போதாவது டிப்ஸ் வழங்கும் பழக்கத்தினை கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வினை National Bureau of Economic Research (NBER) மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்