இலத்திரனியல் கார் வடிவமைப்பில் முன்னணி வகிக்கும் Tesla நிறுவனம் தற்போது சீனாவிலும் தனது கார் உற்பத்தியினை ஆரம்பித்துள்ளது.
இதற்கான அனுமதிகளை ஏற்கனவே பெற்றுள்ள அந்நிறுவனம் சுமார் 2 பில்லியன் டொலர்கள் செலவில் சங்கஹாயில் தனது தொழிற்சாலையினை நிறுவியுள்ளது.
அத்துடன் இதுவே அமெரிக்காவிற்கு வெளியில் நிறுவப்பட்டுள்ள Tesla-வின் முதலாவது கிளையாகும்.
இங்கு வாரம் தோறும் சுமார் 1,000 கார்களை வடிவமைப்பதற்கும் அந்நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.
மேலும் சீன தொழிற்சாலையில் Model 3s வகை கார்களே வடிவமைப்பு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.