மின்னல் வேகத்தில் பயணிக்கும் புதிய தொடருந்தினை பரீட்சிக்கும் ஜப்பான்

Report Print Givitharan Givitharan in வாகனம்

புதிய தலைமுறை புல்லட் வகை தொடருந்து ஒன்றினை ஜப்பான் வடிவமைத்துள்ளது.

இத் தொடரூந்தானது மணிக்கு 248 மைல் வேகத்தில் பயணிக்கக்கூடியது.

அதாவது மணிக்கு 400 கிலோமீற்றர்கள் வேகத்தில் பயணிக்கும்.

எனினும் பயணிகளை ஏற்றியவாறு மணிக்கு 360 கிலோமீற்றர்கள் வேகத்திலேயே பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Alfa-X எனப்பெயரிடப்பட்டுள்ள இத் தொடரூந்தானது தற்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.

இதன் வேகத்தினை அதிகரிப்பதற்காக முன்னால் உள்ள பெட்டி மூக்கு வடிவில் அமைக்கப்பட்டுள்ளதுடன், இதன் நீளத்தினை 72 அடிகள் வரை அதிகரித்துள்ளனர்.

இத்தொடரூந்தானது எதிர்வரும் 2030 ஆம் ஆண்டிலிருந்து பயணிகள் பயன்பாட்டிற்கு வரும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்