ஆப்பிளின் தானியங்கி கார்களை அறிமுகம் செய்யப்படுவதை தாமதப்படுத்தும் சம்பவம்

Report Print Givitharan Givitharan in வாகனம்

ஆப்பிளின் சுயமாக இயங்கக்கூடிய காரானது வீதி விபத்தொன்றில் மாட்டிக்கொண்டுள்ளது.

மாற்றியமைக்கப்பட்ட Lexus RX450h எனப்படும் காரே மேற்படி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இத் தானியங்கிக் காரானது அதில் பொருத்தப்பட்டுள்ள பலவகை உணரிகள் மூலமே செயற்படுகிறது.

ஆப்பிளானது தற்சமயம் இவ்வாறான 66 தானியங்கிக் கார்களை உருவாக்கியுள்ளது.

மொத்தம் 111 ஓட்டுனர்கள் இக் கார்களை செயற்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறான கார்களில் ஒன்றே கடந்த ஆகஸ்டு 24 அன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

எனினும் மேற்படி விபத்தில் மனிதர்களுக்கு சேதங்கள் எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை..

காரானது சில நடுத்தர அளவிலான சேதங்களுடன் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்