உலகிலேயே விலையுயர்ந்த கார் நம்பர் விற்பனை: இத்தனை கோடிகளா?

Report Print Athavan in வாகனம்
357Shares
357Shares
lankasrimarket.com

உலகிலேயே விலையுயர்ந்த கார் நம்பர் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது, இதன் விலை 14 மில்லியன் பவுண்ட்ஸ் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

F1 என்ற நம்பர் தான் உலகிலேயே விலையுயர்ந்த கார் நம்பர், பிரபல கார் பந்தயம் F1 ரேஸ் அடிப்படையில் இந்த எண் உலகமெங்கும் பிரபலமானது.

பொதுவாகவே வாகனங்களுக்கு பேன்ஸி நம்பர் வாங்க அனைவருமே விரும்புவார்கள்.

பணம் படைத்தவர்கள் இதற்காகச் சில லட்சங்கள் வரை இறைக்கவும் தயாராக இருப்பார்கள். இந்தியாவில் கூட பேன்ஸி எண்களுக்காக லட்சக்கணக்கில் செலவழிக்கும் பணக்காரர்களைப் பார்க்க முடியும்.

அந்த வகையில், இங்கிலாந்தில் நம்பர் பிளேட் ஒன்றின் விலை 14 மில்லியன் பவுண்ட்ஸ் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த கான் டிசைன் நிறுவனம் கார்களை வாடிக்கையாளர்கள் விருப்பதுக்கு ஏற்ப மாற்றியமைத்து தரும் பணிகளைச் செய்து வருகிறது.

இந்த நிறுவனத்தின் தலைவர் அப்சல் கான் எப்-1 என்ற பேன்ஸி எண்ணுடைய கார் வைத்திருக்கிறார்.

இதுதான் உலகிலேயே அதிக விலை கொண்ட பேன்ஸி எண். எஸ்ஸெக்ஸ் சிட்டி கவுன்சிலிடமிருந்து இந்த எண்ணை £375,000 கொடுத்து வாங்கிய அப்சல் கான், தன் புகாடி வெய்ரோன் காரின் நம்பராகப் பயன்படுத்தி வருகிறார். இந்த எண்ணை விற்பனை செய்ய முடிவு செய்துள்ள அவர் 14 மில்லியன் பவுண்ட்ஸ் என விலை நிர்ணயித்துள்ளார்.

பிரபல கார் பந்தயமான பார்முலா1- ஐ இந்த எண் குறிப்பிடுவதால் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள் இதை வாங்க அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

இந்த 132 கோடியில் 4,500 மாருதி ஆல்ட்டோ கார்களை வாங்கி விட முடியும். 10 புகாடி வெய்ரோன் கார்களையும் வாங்கி விடலாம்.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்