இலங்கையில் ஐந்து இலட்சம் ரூபாவுக்கு மோட்டார் வாகனம்! கொள்வனவு செய்வோருக்கு மகிழ்ச்சி

Report Print Vethu Vethu in வாகனம்
80Shares
80Shares
ibctamil.com

இலங்கையில் சிறிய ரக இலத்திரனியல் வாகனங்களை குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இலத்திரனியல் வாகனத்தை 5 அல்லது 6 லட்சம் ரூபாவுக்கு வழங்க முடியும் என இறக்குமதியாளர்களின் சங்க தலைவர் சம்பத் மெரின்சிகே தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்று வழங்கிய செவ்வியின் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

சீனாவிலிருந்து குறைந்த விலையில் இந்த வாகனத்தை இலங்கைக்கு கொண்டு வர முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முச்சக்கர வண்டிகளுக்கு மாற்றீடாக இந்த மோட்டார் காரினை பயன்படுத்த முடியும் என சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்