ஐக்கிய இராச்சியத்தின் வீதிகளில் தானியங்கி கார்கள்: எப்போதிலிருந்து தெரியுமா?

Report Print Givitharan Givitharan in வாகனம்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினைக் கொண்ட தானியங்கி கார்களே தொழில்நுட்ப உலகின் நீண்ட நாள் பேசுபொருளாக இருக்கின்றது.

இவ்வாறான தருணத்தில் ஐக்கிய இராச்சியத்தில் இக் கார்கள் பாவனைக்கு வரவுள்ளன.

அத்துடன் இக் கார்களை அறிமுகம் செய்யும்போது தேவைப்படும் ஏனைய வசதிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

2021ம் ஆண்டிலிருந்து பாவனைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள இக் கார்கள் தொடர்பான ஏனைய விடயங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினை வடிவமைப்பதற்கு 75 மில்லியன் பவுண்ட்களும், எலக்ட்ரிக் சார்ஜ் நிலையங்களை உருவாக்குவதற்கு 400 மில்லியன் பவுண்ட்களும், கார்களை கொள்வனவு செய்வதற்கு 100 மில்லியன் பவுண்ட்களும், 5G மொபைல் வலையமைப்பினை ஐக்கிய இராச்சியம் முழுவதும் உருவாக்குவதற்கு 160 மில்லியன் பவுண்ட்களும் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 8,000 கணினி தொழில்நுட்பவியல் ஆசிரியர்களை சேர்த்துக்கொள்வதற்கு 100 மில்லியன் பவுண்ட்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்