இலங்கையில் மோட்டார் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சி

Report Print Vethu Vethu in வாகனம்

அடுத்தாண்டுக்கான வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பல்வேறு சலுகைகள் அடங்கிய அறிக்கையை நிதியமைச்சர் நாடாளுமன்றில் வாசிக்கவுள்ளார்.

இம்முறை வரவு செலவு திட்டத்தில் மோட்டார் வாகன துறை தொடர்பிலலேயே அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மோட்டார் வாகனங்களின் விலைப் பட்டியலில் ஏற்படவுள்ள மாற்றம் தொடர்பான அறிக்கை ஒன்று ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

அதற்கமைய டொயாட்டோ மாதிரி எஞ்ஜன் திறன் கொண்ட 1500CCயை விடவும் குறைந்த AQUA, AXIO போன்ற காரின் தற்போதைய விலை 3000000 ஆக காணப்படுகின்றன. எனினும் வரவு செலவு திட்டத்தில் அதன் விலை ஒரு மில்லியன் ரூபாய் வரையில் குறைவடையவுள்ளது.

ஹொன்டோ மாதிரியை கொண்ட FIT, FREED, GRACE, INSIGHT போன்ற வாகனங்களின் விலை 3 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாக விலை குறைப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த பட்டியில்ல நிஸான் லீப், இலத்திரனியல் மோட்டார் வாகனங்களே மிகப்பெரிய அளவில் விலை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன் விலை குறைப்பு மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகின்றது.

இதேவேளை, நிஸான் X-TRAIL கார்களின் விலை 2 மில்லின் ரூபாய் வரை அதிகரிக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்