பிரித்தானியா தயாரித்த நவீன கார் அறிமுகம்! இலங்கையர் மத்தியில் அதிக கிராக்கி

Report Print Vethu Vethu in வாகனம்

பிரித்தானிய மோட்டார் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட MG ZS என்ற புதிய மோட்டார் வாகனம் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதிநவீன மோட்டார் வாகனத்தை சுமார் 50 இலட்சம் ரூபாவுக்கு பெற்றுக் கொள்ள முடியும் என Euro Sports Auto Lanka நிறுவனம் மற்றும் க்ரோ கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

5 வருட உத்தரவாத காலத்தை கொண்ட இந்த மோட்டார் வாகனத்திற்கு மக்கள் மத்தியில் அதிக கிராக்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

60 வீத வரை திறக்க கூடிய Sun Roof, லெதர் ஆசனம், சுய வானிலை கட்டுப்பாடு, Apple Car Play, ப்லுடூத் வசதி, பின்பக்க கமரா, டயர் அழுத்த செயற்பாட்டு கட்டமைப்பு உட்பட பல வசதிகளை இந்த மோட்டார் வாகனம் கொண்டுள்ளதாக மோட்டார் வாகன நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்