இங்கிலாந்து வங்கியானது பத்தாண்டுகளில் முதல் முறையாக வட்டி வீதம் அதிகரிப்பு

Report Print Thayalan Thayalan in பணம்

இங்கிலாந்து வங்கியானது, கடந்த பத்து ஆண்டுகளில் முதல் முறையாக நேற்று வியாழக்கிழமை வட்டி வீதத்தினை உயர்த்தியுள்ளதாக இங்கிலாந்து வங்கி ஆளுநர் மார்க் கானி தெரிவித்தார்.

அத்துடன், அடுத்த மூன்று ஆண்டுகளில் வட்டி வீதமானது படிப்படியாக மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானிய மத்திய வங்கியின் வட்டி வீதத்தினை தீர்மானிக்கும் குழுவின், பெரும்பாலானோர் வட்டி வீதத்தினை 0.25 இலிருந்து 0.5 ஆக உயர்த்த ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இங்கிலாந்து மக்கள் மீது அழுத்தங்களை பிரயோகித்து பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இங்கிலாந்து வங்கியானது, இதற்கு முன்னர் இறுதியாக கடந்த 2007ஆம் ஆண்டு ஜூலை மாதம் வட்டி வீதத்தை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பணம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்