அமெரிக்க டொலரின் ஒப்பிடும் போதும் இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வளர்ச்சி அடைந்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதத்திற்கு அமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 178.83 ரூபாவாக பதிவாகி இருந்தது.
கடந்த வருடம் இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்திருந்தது. இதன் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமாக பாதிப்படையும் என பொருளியல் துறைசார் அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.
எனினும் இந்த வருட ஆரம்பம் முதல் இலங்கை ரூபாவின் பெறுமதியில் கணிசமான வளர்ச்சி நிலை ஏற்பட்டு வருவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.