அறிமுகமாகியது HTC Desire 21 Pro ஸ்மார்ட் கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்
28Shares

சில வருடங்களுக்கு முன்னர் ஆப்பிள் நிறுவனத்தின் கைப்பேசிகளுக்கு நிகரான ஸ்மார்ட் கைப்பேசிகளை HTC நிறுவனம் வடிவமைத்து வந்தது.

எனினும் அதன் பின்னர் கைப்பேசி உற்பத்தியில் சிறிது பின்தங்கியிருந்தது.

இந்நிலையில் தற்போது HTC Desire 21 Pro எனும் புத்தம் புதிய 5G ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

இக் கைப்பேசியானது 6.7 அங்குல அளவு, 2400 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் Qualcomm Snapdragon 690 5G processor, பிரதான நினைவகமாக 8GB RAM மற்றும் 128GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

தவிர 16 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 48 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்கள், 5 மெகாபிக்சல்கள் மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய நான்கு பிரதான கமெராக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இக் கைப்பேசியின் விலையானது 430 டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்