சீனாவை சேர்ந்த ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமான ZTE தனது புத்தம் புதிய 5G ZTE Blade 20 Pro ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளது.
இக் கைப்பேசியானது 6.52 அங்குல அளவுடைய HD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
அத்துடன் Qualcomm Snapdragon 765G mobile processor, பிரதான நினைவகமாக 6GB மற்றும் 8GB RAM, 128GB சேமிப்பு நினைவகம், 64 மெகாபிக்சல்களை உடைய கமெரா உட்பட 4 பிரதான கமெராக்களை கொண்டுள்ளது.
எனினும் இதன் செல்ஃபி கமெரா, விலை தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
மேலும் இக்கைப்பேசியில் நீடித்து உழைக்கக்கூடிய 4000 mAh மின்கலம் தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.