இவ் வகை கைப்பேசிகளை இனி சாம்சுங் நிறுவனம் அறிமுகம் செய்யாது

Report Print Givitharan Givitharan in மொபைல்
1328Shares

முன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றாக சாம்சுங் திகழ்கின்றது.

ஏனைய நிறுவனங்களை விடவும் வருடம் ஒன்றில் அதிக ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யும் நிறுவனமாகவும் காணப்படுகின்றது.

இந்நிறுவனமானது எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு முதல் Samsung Galaxy Note வகை கைப்பேசிகளை அறிமுகம் செய்யாது என தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் S-Pen உடன் அடுத்த வருடம் அறிமுகம் செய்யப்படவிருந்த Galaxy S21 Ultra கைப்பேசியும் அறிமுகம் செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசிகளை உற்பத்தி செய்வதில் சாம்சுங் கவனம் செலுத்தவுள்ளது.

இதன் காரணமாகவே Note வகை ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைப்பதை நிறுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் இதன் உண்மைத் தன்மை தொடர்பில் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்