ஆப்பிள் நிறுவனம் iPhone 12 கைப்பேசிகளை இவ் வருடம் அறிமுகம் செய்யவுள்ளது.
இதற்கான அறிமுக நிகழ்வு நாளைய தினம் இடம்பெறும் என ஏற்கணவே தகவல் வெளியாகியிருந்தது.
இவ் வருடம் 4 மொடல்களை உடைய iPhone 12 கைப்பேசிகள் அறிமுகம் செய்யவுள்ளன.
இவற்றில் 5.4 அங்குல அளவு மற்றும் 6.1 அங்குல அளவுடைய iPhone 12 கைப்பேசிகளும், 6.1 அங்குல அளவுடைய iPhone 12 Pro, 6.7 அங்குல அளவுடைய iPhone 12 Pro Max என்பனவும் அடங்குகின்றன.
இவ்வாறு அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த 4 மொடல்களிலும் 6.1 அங்குல அளவுடைய iPhone 12 கைப்பேசியே மிகவும் பிரபல்யமானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை அப்பிள் சாதனங்களின் ஆய்வாளர் Ming-Chi Kuo வெளியிட்டுள்ளார்.